ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் தமிழ் ட்ரெய்லரை தளபதி விஜய் வெளியிட்டார். இது சற்று நேரத்தில் இணையத்தில் ட்ரெண்டானது.
தற்போது விஜய்க்கு நன்றி கூறியுள்ள ஷாருக்கான், ”மிக்க நன்றி நண்பா! இதனால தான் நீங்க தளபதி, கூடிய விரைவில் ஒரு அருமையான விருந்தில் சந்திப்போம். லவ் யூ" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் லைக்ஸை குவித்து வருகிறார்கள்.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள, பதான் படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட நட்சத்திரங்களும் பதான் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் காவி நிறத்தில் தீபிகா படுகோன் பிகினி அணிந்திருந்தது வலதுசாரிகளின் எதிர்ப்பைப் பெற்றது. படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்தனர்.
வாரிசு விஜய் வெளியிட்ட ஷாருக்கான் 'பதான்’ பட ட்ரெய்லர்.. ஹாலிவுட்டை மிஞ்சும் காட்சிகள்!
Thank you my friend @actorvijay You are Thalapathy for this humble reason, let's meet for delicious feast soon.
Mikka Nandri Nanba! Idhanala Dhaan Neenga Thalapathy koodiya viraivil oru arumaiyana virunthil santhipom.
Love you
— Shah Rukh Khan (@iamsrk) January 10, 2023
இதற்கிடையில் விஜய்யின் புதிய படமான 'வாரிசு' நாளை உலகமெங்கும் வெளியாகிறது. முழுக்க முழுக்க கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Shah rukh khan