'ஷாருக் எனக்கு சகோதரர் மாதிரி...’ சம்பளத்தை மறுத்த சல்மான் கான்!

'ஷாருக் எனக்கு சகோதரர் மாதிரி...’ சம்பளத்தை மறுத்த சல்மான் கான்!

ஷாருக்கான் - சல்மான் கான்

இரும்பு உடம்புக்குள் ஒரு கரும்பு மனுசு என்றால் அது சல்மான் கான் தான். பல வருடங்களுக்கு முன் பார்ட்டி ஒன்றில் ஷாருக்கானின் சட்டையைப் பிடித்து மூக்கை உடைக்க முயன்றவர் இவர். ஆனால், அவர் பீயிங் ஹியூமனாக கனிந்து பல வருடங்களாகிறது.

 • Share this:

  ஷாருக்கான் சமீபமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். ஒரு மெகா ஹிட்டை கொடுத்து பல காலமாகிறது. இந்நிலையில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதன் (Pathan) என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். தீபிகா படுகோன் நாயகி. டிம்பிள் கபாடியா, ஜான் ஆபிரஹாம் உடன் நடிக்கின்றனர். கௌரவ வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார்.

  ஷாருக் படத்தில் சல்மான் கௌரவ வேடமா? இந்த கேள்வியை ஆச்சரியக்குறியாக்கியவர் ஆதித்யா சோப்ரா. இவரது யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தான் ஷாருக் படத்தை தயாரித்து வருகிறது. 10 தினங்கள் சல்மான் - ஷாருக் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துள்ளனர். கடைசி நாளில் சல்மான் கானுக்கு பெரும் தொகை ஒன்றை சம்பளமாக தர முயன்றிருக்கிறார் ஆதித்ய சோப்ரா. அவரைப் பொறுத்தவரை சல்மான் கான் படத்தில் இருப்பது அதன் மார்க்கெட் வேல்யூவை பல மடங்கு அதிகப்படுத்தும். ஆனால், "ஷாருக் என் சகோதரர் மாதிரி" என்று சம்பளம் வாங்க மறுத்துவிட்டார் சல்மான்.

  அரபு நாடுகளை மையப்படுத்தி இந்தப் படத்தை தயாரித்து வருகின்றனர். ஆக்ஷன் அதிரடிக்கு படத்தில் பஞ்சமிருக்காது என்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: