ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

50000 ஷாருக்கான் ரசிகர்களுக்கு பாதான் FDFS காட்சி ஏற்பாடு!

50000 ஷாருக்கான் ரசிகர்களுக்கு பாதான் FDFS காட்சி ஏற்பாடு!

பதான்

பதான்

FDFS கொண்டாட்டம் முதல் நாளுடன் முடிந்து விடாமல், குடியரசு தின வார இறுதி முழுவதும் நடைபெறும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாவதால், அவரது ரசிகர்கள் அதை ஒரு திருவிழாவாக கொண்டாட தயாராகி வருகின்றனர். செய்திகளின்படி, ஷாருக்கானின் ரசிகர் மன்றம் இந்தியா முழுவதும் 50,000 ரசிகர்களுக்கு பதான் படத்தின் முதல் நாள் முதல் காட்சி திரையிடலை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

SRK யுனிவர்ஸ் என்ற ரசிகர் மன்றத்தின் இணை நிறுவனர் யாஷ் பர்யானி, இந்தியாவின் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பதான் படத்தை திரையிடப் போவதாக இந்தி ஊடகத்திடம் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் மட்டும் ரூ.1 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச முன்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் 7 முதல் 8 FDFS கொண்டாட்டங்கள் இருக்கும், டெல்லியில் 6 நிகழ்வுகள் இருக்கும். அதேபோல், மற்ற நகரங்களிலும் பல FDFS கொண்டாட்டங்கள் இருக்கும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

FDFS கொண்டாட்டம் முதல் நாளுடன் முடிந்து விடாமல், குடியரசு தின வார இறுதி முழுவதும் நடைபெறும். தவிர, எஸ்ஆர்கே யுனிவர்ஸ், பதான் வர்த்தகத்தை செய்யவும் திட்டமிட்டுள்ளது. "நாங்கள் பதான் சிறப்பு பொருட்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். ஷாருக் திரைப்படங்களை ஒரு திருவிழாவாகக் கொண்டாட வேண்டும் என்பதே எங்களின் எண்ணமாகும்” என்று SRK யுனிவர்ஸ் யாஷ் தெரிவித்தார்.

காந்தாரா முதல் லவ் டூடே வரை.. பொங்கலுக்கு டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் படங்கள் லிஸ்ட்

தவிர, சர்வதேச லீக் டி20-யின் போது புர்ஜ் கலீஃபாவில் பதான் டிரெய்லர் வெளியிடப்படும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பதான் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan