முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''தொடர் தோல்வியால் ஹோட்டல் துவங்க நினைத்தேன், அதற்காக சமையல் கற்றுக்கொண்டேன்.." - உருக்கமாக பேசிய ஷாருக்கான்

''தொடர் தோல்வியால் ஹோட்டல் துவங்க நினைத்தேன், அதற்காக சமையல் கற்றுக்கொண்டேன்.." - உருக்கமாக பேசிய ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான்

ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்ததற்கு நன்றி.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியான பதான் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துவருகிறது. கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளால் சரிவிழுருந்த பாலிவுட் திரையுலகை மீட்கும் விதமாக பதான் திரைப்படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு நாளும் ரூ.100 கோடி அளவுக்கு வசூலித்துவருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டடாடும் விதமாக மும்பையில் பத்தரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஷாருக்கான் பதான் வெற்றி குறித்து உருக்கமாக பேசினார். அப்போது பேசிய அவர், ரசிகர்கள் இப்படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கையைக் கொடுத்ததற்கு நன்றி.

நான் கடந்த ஒன்றரை வருடமாக வேலை எதுவும் செய்யவில்லை. நான் அந்த நேரத்தை என் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் செலவிட்டேன். என் குழந்தைகளான ஆர்யன், சுஹானாவின் வளர்ச்சியை பார்க்க முடிந்தது.

கடந்த சில படங்கள் வெற்றிபெறாதபோது, நான் வேறு தொழிலை துவங்கலாம் என்று நினைத்தேன். நான் சமைக்க கற்றுக்கொண்டேன். ரெட் சில்லிஸ் ஈட்டரி என்ற பெயரில் புதிய உணவகம் துவங்கலாம் என நினைத்தேன என உருக்கமாக பேசினார்.

First published:

Tags: Actress Deepika padukone, Shah rukh khan