ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ச்சை ஒருபக்கம்.. வசூல் மறுபக்கம்.. முன்பதிவில் மட்டும் ரூ.70கோடி வசூல் செய்த பதான்!?

சர்ச்சை ஒருபக்கம்.. வசூல் மறுபக்கம்.. முன்பதிவில் மட்டும் ரூ.70கோடி வசூல் செய்த பதான்!?

பதான்

பதான்

பதான் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் எதிர்ப்புகள் எழுந்தன. பல இடங்களில் பதான் போஸ்டர்கள் சேதப்படுத்தப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாருக்கானின் பதான் படம் முன்பதிவில் 70 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள திரைப்படம் 'பதான்'. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக இதில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் நடனமாடிய வீடியோ வெளியாகி, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் எதிர்ப்புகள் எழுந்தன. பல இடங்களில் பதான் போஸ்டர்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பதான் திரைப்படம் முன்பதிவில் கிட்டத்தட்ட 70 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முதல் நாள் முன்பதிவில் 32 கோடி, இரண்டாம் நாள் 18 கோடி, மூன்றாம் நாள் 19 கோடி என மொத்தம் 69 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது தீட்டு, இவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை - ஐஸ்வர்யா ராஜேஷ்!

இந்தியாவில் மட்டும் இப்படம் 5000 ஸ்கிரீன்களில் வெளியாகிறது. இதுவரை 5.21 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதன் மூலம் ஒரு நேரடி இந்திப் படத்திற்கான அதிகப்பட்ச முன்பதிவாக பதான் மாறியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இப்படம், முன்பதிவு தவிர்த்து முதல் நாளில் மட்டும் 45 முதல் 50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Deepika padukone, Shah rukh khan