Home /News /entertainment /

ஜவான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த ஷாருக்கான் - தீபிகா படுகோன்!

ஜவான் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த ஷாருக்கான் - தீபிகா படுகோன்!

ஷாருக்கான் - தீபிகா படுகோன்

ஷாருக்கான் - தீபிகா படுகோன்

இந்தப் படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ஷாருக்கானும், நடிகை தீபிகா படுகோனும் சென்னை வந்துள்ளனர்.

    கோலிவுட் இயக்குனர் அட்லீ, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் நிலையில், நடிகை பிரியாமணியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுவாரஸ்யமாக, பிரபல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த நிலையில், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பது தான் தற்போதைய லேட்டஸ்ட் தகவல்.

    இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நேற்று சென்னை வந்தனர். தீபிகா அடர் நீல நிற டெனிம் ஜம்ப்சூட் அணிந்திருந்தார். இப்படத்தில் ஷாருக்கானின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடக்கும் ஷெட்யூலில் விஜய் சேதுபதியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக தளபதி விஜய்யும் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. ஆகையால் இப்போது சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில், அவர் கலந்துக் கொள்வாரா என்பதை அறிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தின் மூலம் நயன்தாராவும் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் விசாரணை அதிகாரியாகவும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கோலிவுட் காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கவுள்ளார். இவர்கலுடன் சன்யா மல்ஹோத்ரா மற்றும் சுனில் குரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் ஜூன் 2, 2023-ல் திரைக்கு வரவுள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Deepika Padukone, Shah rukh khan

    அடுத்த செய்தி