• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Shah Rukh Khan-Vijay: ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Shah Rukh Khan-Vijay: ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஷாருக்கான் - விஜய்

ஷாருக்கான் - விஜய்

கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கானை ட்விட்டரில் 41.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

  • Share this:
    நடிகர் விஜய்யை ‘வெரி கூல்’ என்று புகழ்ந்துள்ளார் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ஷாருக் கான்.

    கிங் ஆப் பாலிவுட் என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் தயாரிப்பாளர், தொலைக்காட்சி பிரபலம் என பலமுகங்களைக் கொண்டுள்ளார். 80-களின் இறுதியில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கிய ஷாருக்கான் அதனைத் தொடர்ந்து சினிமாவுக்குள் நுழைந்தார். இன்று பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கானை ட்விட்டரில் 41.7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அவர்களுடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஷாருக். அந்த வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் இன்று ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தைக் குறிப்பிட்டு, இவரைப்பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியுமா என விஜய் ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ‘வெரி கூல்’ என தெரிவித்திருந்தார் ஷாருக்கான். அவ்வளவு தான் உடனடியாக இந்த ட்வீட்டை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர் விஜய் ரசிகர்கள்.

    தவிர ஷாருக்கான் அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: