ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலகின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஷாருக்கான்!

உலகின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த ஷாருக்கான்!

ஷாருக்கான்

ஷாருக்கான்

உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான எம்பயர், உலகின் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. திரையுலக ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இதை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் சிறந்த 50 நடிகர்கள் பட்டியலில் ஒரே இந்திய நடிகராக ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

உலகின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான எம்பயர், உலகின் 50 சிறந்த நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. திரையுலக ரசிகர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் இதை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர்.

இதில் பல முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த 50 சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஷாருக்கான் இடம் பிடித்து உள்ளார். இந்த பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய நடிகர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அவருக்கு கிடைத்த பெரிய கவுரவமாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டை மூன்று தசாப்தங்களாக ஆட்சி செய்து வருகிறார். பாஜி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ஷாருக்கானின் நடிப்பு பயணம் தொடங்கியது 1992-ல் தீவானா என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். 'தில்வாலே துல்ஹனியா லெ ஜாயங்கே' காதல் படத்தில் நடித்த பிறகு முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது பதான் படத்தின் மூலம் திரைகளில் காட்சியளிக்க உள்ளார். ​​ஷாருக்கான் தற்போது வெளியாகவுள்ள 'பதான்' படத்தின் ப்ரமோஷன் பணியில் பிஸியாக இருக்கிறார்.

Also read... இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரியாக மாறிய பிக்பாஸ் வீடு!

 இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம் பெற்ற பேஷரம் ரங் பாடலில் தீபிகாவின் காவி நிற பிகினிக்கு எதிராக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Shah rukh khan