அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் வெளியாகியுள்ளது...!

அட்லீ - ஷாருக்கான்

பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை அட்லி இயக்கியப் படங்களில் இதுவே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாகும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அட்லி, இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு ஜவான் என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

விஜய்யை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்கள் இயக்கிய அட்லி அடுத்து ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார். நாயகியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இசை .ஆர்.ரஹ்மான். இந்தப் படத்தில் றாருக்கான் இரு வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு வேடம் ராணுவ அதிகாரி எனவும் கூறப்படுகிறது. ஜவான் என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாகவும் பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.

Also read... சுமூகத்தீர்வை எட்டிய தலைவி படத்தின் பஞ்சாயத்து...!

விரைவில் டைட்டில் டீஸரை வெளியிட உள்ளனர். அதனைத் தொடர்ந்து படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும். பிரபல ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை அட்லி இயக்கியப் படங்களில் இதுவே அதிக பொருட்செலவில் தயாராகும் படமாகும்.
Published by:Vinothini Aandisamy
First published: