ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி.. விஜய்.. விஜய் சேதுபதி..! ஷாருக்கானுக்காக கூடிய கூட்டம்! நெகிழ்ந்துபோன ஷாருக்!

ரஜினி.. விஜய்.. விஜய் சேதுபதி..! ஷாருக்கானுக்காக கூடிய கூட்டம்! நெகிழ்ந்துபோன ஷாருக்!

ஷாருக்கான் -அட்லி

ஷாருக்கான் -அட்லி

Shah Rukh Khan: சென்னை விசிட் குறித்து ஷாருக்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் நடைபெற்று வந்த ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஷாருக்கின் நேரடி காட்சிகள் படமாக்கப்பட்டன.

  இதனை தொடர்ந்து சென்னையை விட்டு கிளம்புவதற்கு முன்னதாக நடிகர் விஜய்யை அவருடைய சூட்டிங் ஸ்பாட்டில் நேரில் சென்று ஷாருக்கான் மற்றும் அட்லி சந்தித்துள்ளனர். அப்போது விஜய்யின் சூட்டிங்கையும் அவர்கள் பார்த்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகின. முன்னதாக, அட்லி பிறந்தநாளின்போது விஜய் -ஷாருக்கான் -அட்லி மூவரும் சந்தித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் மீண்டும் விஜயை சந்தித்துள்ளார் ஷாருக்.

  இதையும் படிங்க: இவர்தான் காதலியா? மாடல் நடிகையுடன் நெருக்கமான புகைப்படம் பகிர்ந்த காளிதாஸ் ஜெயராம்!

  இந்நிலையில் தமிழகத்தின் விசிட் குறித்து ட்விட்டரில் நெகிழ்ந்துள்ளார் ஷாருக். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், '' தலைவர் எங்கள் செட்டை பார்வையிட்டார். நயன் தாரா நடித்த போர்ஷனை அனிருத்துடன் சேர்ந்து பார்த்தார். விஜய் சேதுபதியுடன் முக்கியமாக கலந்துரையாடினார். விஜய் சுவையான உணவு பரிமாறினார். இயக்குநர் அட்லிக்கும் அவரது மனை ப்ரியாவுக்கும் நன்றி. நான் சிக்கன் 65 செய்வது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அட்லி இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்பு நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றிப்படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கானை வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் சூப்பர் ஹிட்டை ருசிக்காத ஷாருக் அட்லியின் ஜவான் படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதேபோல் ஷாருக்கின் ரசிகர்களும் இப்படத்துக்காக காத்திருக்கின்றனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Atlee (@atlee47)  இயக்குநர் அட்லி, ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அட்லியின் மனைவியான ப்ரியா திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor Vijay, Rajini Kanth, Shah rukh khan