ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஷாருக்கான் - தீபிகா படுகோன் பதான் விளம்பர பலகைகள் உடைப்பு

ஷாருக்கான் - தீபிகா படுகோன் பதான் விளம்பர பலகைகள் உடைப்பு

பதான்

பதான்

பதான் திரைப்படம் ஜனவரி 25, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பதான் விளம்பர பலகைகளை விஷ்வ இந்து பரிஷத் உறுப்பினர்கள் உடைத்துள்ளனர்.

அகமதாபாத்தில் பதான் விளம்பர பலகைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் நடித்துள்ள பதான் திரைப்படம் வலதுசாரிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் அணிந்திருந்த காவி நிற பிகினி உடையால் பதான் படத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அகமதாபாத் ஒன் மாலை பஜ்ரங் தள் (விஷ்வ இந்து பரிஷத்) உறுப்பினர்கள் முற்றுகையிட்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பதான் விளம்பர பலகைகளை அவர் அடித்து உடைத்துள்ளனர். இந்த வணிக வளாகம் கர்னாவதி பகுதியில் அமைந்துள்ளது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோ மக்கள் மத்தியில் கலவையான ரியாக்‌ஷன்களை பெற்று வருகிறது. தீபிகா படுகோனே படத்திற்கு இதுபோன்ற எதிர்ப்புகள் வருவது இது முதல் முறையல்ல.

பதான் திரைப்படம் ஜனவரி 25, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் முன்பதிவுகள் பொங்கலில் இருந்து தொடங்கும். படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை மாற்றுமாறு தயாரிப்பாளர்களிடம் CBFC கூறியுள்ளது. இதனை திரையுலகினர் பலரும் விமர்சித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actress Deepika padukone, Shah rukh khan