• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - எந்தப் படத்தின் தழுவல் தெரியுமா?

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் - எந்தப் படத்தின் தழுவல் தெரியுமா?

அட்லீ - ஷாருக்கான்

அட்லீ - ஷாருக்கான்

படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் நயன்தாராவாக இருக்கக் கூடும். ஆகஸ்ட் 15 இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரியவரலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அட்லி படம் இயக்குகிறார் என்றதும் ரசிகர்கள் முதலில் கேட்கும் கேள்வி, எந்தப் படத்தின் தழுவல்? அட்லியின் முதல் படம் ராஜா ராணி மணிரத்னத்தின் மௌனராகம் படத்தின் சாயலைக் கொண்டது. ஆனால், புனித் ராஜ்குமாரின் கன்னடப்படத்தை அப்படியே நகல் செய்ததுதான் ராஜா ராணி.

அட்லியின் இரண்டாவது படம் தெறி விஜயகாந்தின் சத்ரியன் படத்தின் சாயலை கொண்டிருந்தது. மெர்சல் மூன்று முகம் உள்பட பல படங்கள். மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருந்த தயாரிப்பாளர் அட்லி மீது நஷ்டஈடு கேட்டு புகாரளித்த சம்பவமும் நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அட்லி ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை இயக்குகிறார் என்றதும் இதையேதான் ரசிகர்கள் கேட்டனர். எந்தப் படத்தின் தழுவல் இது? 2006 இல் உதயன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் மேலோட்டமான தழுவல் இந்தப் படம் என்கின்றன செய்திகள். இதில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக இருப்பார். அப்போது சில போலீஸ் உயரதிகாரிகள் கொல்லப்படுவார்கள். விஜயகாந்த் மீது அனைவருக்கும் சந்தேகம் வரும். கொலை செய்தது விஜயகாந்த்தான். ஆனால், போலீஸ் அதிகாரியில்லை, அவரது உடன் பிறந்த இன்னொரு சகோதரர். ஏன் அவர் கொலை செய்தார், எப்படி சகோதரர்கள் பிரிந்தார்கள் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக்

Also read... ஓ மை கடவுளே - விஜய் சேதுபதி நடித்த வேடத்தில் அல்லு அர்ஜுன்?

படிக்கும் போது மெர்சல் படத்தின் அவுட்லைன் நினைவுக்கு வருகிறதா? இந்தக் கதையை சர்வதேச பூச்சுடன் ஷாருக்கானை வைத்து அட்லி எடுப்பதாக தகவல். இதில் ஷாருக்கானுக்கு இரண்டு வேடங்கள். ஆம், சகோதரர்கள்தான். ஆகஸ்ட் 15 ஆம் தேதி முன்னோட்ட டீஸரை வெளியிட அட்லி திட்டமிட்டுள்ளாராம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் முதல் ஷெட்யூல்டை குவைத்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்

படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் நயன்தாராவாக இருக்கக் கூடும். ஆகஸ்ட் 15 இந்த கேள்விகளுக்கான விடைகள் தெரியவரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: