சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி மரணம் - கொலையா? தற்கொலையா?

சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி மரணம் - கொலையா? தற்கொலையா?
சின்னத்திரை நடிகையின் கணவர் மரணம்
  • News18
  • Last Updated: October 25, 2019, 12:31 PM IST
  • Share this:
சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் நேற்று ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் பழனி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து இவர் யார் எந்த ஊர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர் சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்று தெரியவந்தது.


உடனே ஜோலார்பேட்டைகாவல் நிலையத்தில் இருந்து ராகவிக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த ராகவி இவர் எனது கணவர்தான் என்று அடையாளம் காட்டியுள்ளார்.சசிகுமார் சென்னை வளசரவாக்கம் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடன்சுமை அதிகமாகவே இவர் பணிபுரிந்த ஸ்டூடியோவிலிருந்த மூன்று லட்சம் மதிப்புள்ள கேமராவை அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது. சசிகுமார் சில தினங்களுக்கு முன்னால் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள அடர்த்தியான மரங்கள் நிறைந்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவருடன் பணிபுரிந்த மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகவும், இதனால் மகேஷ் சில தினங்களுக்கு முன்பு சசிகுமாரை கேமரா திருடன் என்று ஒரு தகவலை வாட்ஸ் அப்பில் பரப்பி வந்ததாக மனைவி ராகவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ பார்க்க: பிகில் வியாபாரம் உண்மை நிலவரம் என்ன?

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்