கணவர்... கழுதை... வைரலாகும் ஸ்டார் தம்பதியின் டிக் டாக் வீடியோ!

கணவர்... கழுதை... வைரலாகும் ஸ்டார் தம்பதியின் டிக் டாக் வீடியோ!
லதாராவ் - ராஜ் கமல்
  • Share this:
நடிகை லதா ராவ் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த டிக் டாக் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமானவர்கள் லதா - ராஜ் கமல் தம்பதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்கு ராகா, லாரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தொழில்முறையில் பெரிய கேமராக்களில் முன்பு நடித்திருந்தாலும், இத்தம்பதியினர் டிக் டாக் வீடியோக்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் லதா ராவ் சமீபத்தில் தனது கணவருடன் எடுத்த டிக் டாக் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்ளும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ மட்டுமின்றி நடிகை லதா ராவ் பல டிக் டாக் வீடியோக்களையும் தனது சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அப்படி வெளியிடப்பட்ட வீடியோக்களில் பெரும்பாலும் கணவன் - மனைவி இருவரும் ஒரே நிற உடைகளை உடுத்தி டிக் டாக் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க: ஆணவக் கொலைகள் பற்றிய சமரசமில்லாத கதை...! கன்னி மாடத்தை பாராட்டிய பா.ரஞ்சித்
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading