ஹோம் /நியூஸ் /entertainment /

சீரியல் நடிகர் அர்னவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

சீரியல் நடிகர் அர்னவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு

நடிகர் அர்னவ்

நடிகர் அர்னவ்

சின்னத்திரை நடிகர் அரணவ் தனது காதல் மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டு அண்மையில் சிறையில் அடைக்கப்பட்டார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரை நடிகர் அர்னவிற்கு  பூந்தமல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

  சன் டிவி செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரும், விஜய் டிவி செல்லம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் அர்னவ்வும் திருமணம் செய்துக் கொண்டதாக இணையத்தில் செய்திகள் வெளியாகின. திருமணத்தை அறிவித்த சில வாரங்கள் கழித்து நிலையில், தனது கணவர் அர்னவ் தன்னை தவிர்த்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா. அதோடு கணவர், கர்ப்பமாக இருக்கும் தன்னை கீழே தள்ளியதால், கரு கலைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

  இதையும் படிங்க : காதல்.. கல்யாணம்.. கைது! செல்லம்மா சீரியலில் இருந்து நடிகர் அர்ணவ் நீக்கம்?

  இது குறித்து பேசிய அர்னவ், கடந்த 5 வருடங்களாக திவ்யா தன்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும், கணவருடன் இருந்துக் கொண்டே விவாகரத்து ஆகிவிட்டது என பொய் சொல்லி தன்னை காதலித்ததாகவும், அவருக்கு பெண் குழந்தை இருந்ததையும் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கிடையே திவ்யாவை அடித்து துன்புறுத்தியாக அளித்த புகாரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் அர்னாவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை பெற்று கொண்ட நிலையில் அர்னவ் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

  இதையடுத்து அண்மையில் பூந்தமல்லி அடுத்த நேமம் பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் போலீசார் அர்னவை கைது  செய்தனர். அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற உத்தரவின்படி அர்னவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது.

  இந்நிலையில் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு அளித்திருந்த நிலையில், இன்று மனுவை விசாரித்த நீதிபதி அர்னவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Cinema, Television