ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘கிளாமர் ரோல்.. பாரதிராஜா சார் எனக்கு காட் ஃபாதர்’ – ’முதல் மரியாதை’ நினைவுகளை பகிரும் நடிகை ராதா!

‘கிளாமர் ரோல்.. பாரதிராஜா சார் எனக்கு காட் ஃபாதர்’ – ’முதல் மரியாதை’ நினைவுகளை பகிரும் நடிகை ராதா!

நடிகை ராதா - பாரதி ராஜா

நடிகை ராதா - பாரதி ராஜா

‘முதல் மரியாதை படத்தில் செருப்பு அணியாமல், சற்றே முதிர்ந்த தோற்றத்தில் சிவாஜி சார் நடித்திருப்பார். அவரைப் பார்த்தாலே அவர் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும்.’

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பாரதி ராஜா தனக்கு காட்ஃபாதர் போன்றவர் என்று நடிகை ராதா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

  முதலில் எனக்கு தமிழ்த் திரையுலகம் பற்றி அதிகம் தெரியாது. மலையாளத்தில் சின்ன கிராமத்தில் நான் இருந்தேன். அங்கு எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் படங்கள் மட்டும்தான் ரிலீசாகும். அவர்களைப் பார்த்து தான் நடிப்பை கற்றுக் கொண்டேன். அலைகள் ஓய்வதில்லைதான் எனது முதல் படம்.

  முதல் படத்தில் நான் நடிக்கும்போது பாரதிராஜா சார் மிகப் பெரிய டைரக்டர் என்று எனக்கு தெரியாது. ஒரு டீச்சர் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார் என்ற சூழலில்தான் பாரதிராஜாவுடன் நான் பணியாற்றினேன். அவர் கண்டிப்பான ஆசிரியர். ஆனால் எல்லோரும் சொல்லும் அளவுக்கு மோசமானவர் இல்லை.

  அலைகள் ஓய்வதில்லை படத்தில் காதல் ஓவியம் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடலில் நான் அணிந்திருந்த டிரெஸ்ஸை பார்த்தாலே எனக்கு சந்தோஷம் ஏற்படும். பாரதிராஜா எனக்கு காட்பாதர் மாதிரி. அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு பின்னர் எனக்கு கிளாமர் ரோல் தான் கிடைத்து வந்தது. நான் விருதை எதிர்பார்த்து ஒருபோதும் நடிப்பது கிடையாது.

  ‘மறைந்த தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்’ – தெலங்கானா அரசு அறிவிப்பு

  பாரதிராஜா சாரின் முதல் மரியாதை திரைப்படத்தை என்னால் மறக்கவே முடியாது. இதில் சிவாஜி சாருடன் இணைந்து நடித்தது எனக்கு மிகப் பெரும் பெயரை பெற்று தந்தது. இந்த படத்திற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். குறிப்பாக இயக்குனர் பாரதிராஜா மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார். ஆனால் விருது கிடைக்கவில்லை. இதனால் பாரதிராஜா சார் மிகவும் வருத்தத்தில் இருந்தார். நான் அவரிடம் ‘இதற்கு போயா வருத்தப்படுவீர்கள். பரவாயில்ல சார்’ என்றேன்.

  முதல் மரியாதை படத்தில் செருப்பு அணியாமல், சற்றே முதிர்ந்த தோற்றத்தில் சிவாஜி சார் நடித்திருப்பார். அவரைப் பார்த்தாலே, அவரது கேரக்டரை பார்த்தாலே அவர் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும்.

  திரைப்படங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் - அமைச்சருக்கு கோரிக்கை வைத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்

  இந்தப் படத்தில் எனக்கு சூப்பரான கேரக்டரை கொடுத்ததற்கு பாரதிராஜா சாருக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. எனக்கு நீச்சல் தெரியாது. ஆனால் அந்த படத்தில் பரிசலை எல்லாம் ஓட்டினேன். பரிசலை முதலில் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. நான் ஒரு பக்கம் துடுப்பு போட்டால், பரிசல் ஒரு பக்கம் செல்லும்

  முதல்மரியாதை படப்பிடிப்பு காட்சிகளை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது. எம்.ஜி.ஆர். சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் கடைசி வரை நடிக்க முடியாமல் போனது இன்றைக்கும் வருத்தமாக உள்ளது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  Published by:Musthak
  First published:

  Tags: Kollywood