ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்…

இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணன் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்…

எஸ்.வி. ரமணன்

எஸ்.வி. ரமணன்

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரபல இசையமைப்பாளர் எஸ்.வி. ரமணன் மறைவுக்கு தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், பழம்பெரும் இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். அனிருத்தின் தாயாரான லட்சுமி ரவிச்சந்தரின் தந்தை தான் எஸ்.வி.ரமணன்.

எஸ்.வி ரமணன், வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இவரது குரலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இவர் ஆன்மீகம் தொடர்பான ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார். இவரது ஆவணப்படம் ஒன்றிற்கு நடிகர் ரஜினிகாந்தும் குரல் கொடுத்திருந்தார்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த எஸ்.வி.ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மக்கள் தொடர்பு கலையில் இவர் செய்த சாதனைக்காக இவருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது. இவர் நடிகர் ரஜினிகாந்தை ஒருமுறை நேர்காணலும் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான அனைத்து படங்களும் படுதோல்வி

இந்நிலையில் மறைந்த ரமணனுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது-

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் தலைவரான கே.சுப்பிரமணியத்தின் மகனும் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், விளம்பர பின்னணி குரல் பிரபலமும் இசையமைப்பாளருமான எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன்.

Ponniyin Selvan: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரன்னிங் டைம் இதுதான்!

என் மீது அன்பும், பாசமும் கொண்டவரான எஸ்.வி.ரமணன், நடிகர் சங்க தலைவராக நான் இருந்தபோது, என்னை பாராட்டியதோடு, எனக்கு உறுதுணையாக இருந்து, திறம்பட செயல்பட பேருதவியாக இருந்தவர். நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பல மேடை நாடகங்களில் நடித்ததோடு, இசையமைப்பாளராக, ஆவணப்படத் தயாரிப்பாளராக, தூர்தர்ஷனுக்காக பல தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அவரின் வெண்கல குரலுக்கு இன்று வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் கலைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Musthak
First published:

Tags: Vijayakanth