உடல் எடையை குறைத்த சீனியர் நடிகர்கள் குஷ்பு, பிரபு...!

நடிகை குஷ்பூ

இளம் நடிகர்களின் பிட்னெஸ்ஸைவிட இந்த சீனியர் நடிகர்களின் ஸ்லிம்மான தோற்றம் நடுத்தர வயது தாண்டியவர்களுக்கு நிச்சயம் உடல் இளைப்பதற்கான உத்வேகத்தை தரும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பொதுவாகவே நடிகர்கள் உடல்கட்டை அக்கறையுடன் பேணுவார்கள். இளம் நடிகர்களை இப்போதெல்லாம் சிக்ஸ்பேக் இல்லாமல் பார்ப்பது அரிது. சீனியர் நடிகர்கள் உடம்பு விஷயத்தில் அத்தனை அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அதுவும் குழந்தை பிறந்தால் உடல் எடை கூடுவதை கண்டு கொள்வதில்லை. ஆனால், அது தவறு என்பதை சீனியர் நடிகர்கள் குஷ்புவும், பிரபுவும் நிரூபித்திருக்கிறார்கள்.

நடிகை குஷ்பு அரசியலில் குதித்து மூன்று கட்சிகள் மாறி பரபரப்பாக இருக்கிறறார். அவ்வப்போது சினிமா, டிவியிலும் தலைகாட்டுகிறார். குஷ்பு சாதாரணமாகவே பப்ளியாக இருப்பார். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு மேலும் குண்டானார். அதுபற்றி அவரது ரசிகர்கள் யாரும் கவலைப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குஷ்பு குண்டாக இருப்பது அவர்களுக்குப் பிடித்திருந்தது. இந்நிலையில், கடும் டயட் மற்றும் உடற்பயிற்சியில் உடல் இளைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் குஷ்பு. சில வாரங்கள் முன்பு உடல் மெலிந்த தோற்றத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். பத்து வயது குறைந்தது போலிருந்தது அதில் அவரது தோற்றம். இப்போது மீண்டும் சில படங்களை பகிர்ந்திருக்கிறார்.குஷ்பு போலவே பிரபுவும் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார். பிரபு என்றாலே நமக்கு கனத்த உருவமே நினைவுவரும். அந்தளவுக்கு பல பத்து வருடங்களாக குண்டான தோற்றத்தில்தான் அவர் இருக்கிறார். தற்போது பொன்னியின் செல்வனில் நடிப்பவர், உடல் எடையை பெருமளவு குறைத்துள்ளார்.

prabhu, actor prabhu, prabhu movies, prabhu ponniyin selvan, prabhu age, actor prabhu, actor prabhu family, actor prabhu salary, aishwarya prabhu, tamil actor prabhu movies list, prabhu wife, actor prabhu nepal wikipedia, prabhu son, பிரபு, நடிகர் பிரபு, பிரபு திரைப்படங்கள், பிரபு பொன்னியின் செல்வன், பிரபு வயது, நடிகர் பிரபு, நடிகர் பிரபு குடும்பம், நடிகர் பிரபு சம்பளம், ஐஸ்வர்யா பிரபு, தமிழ் நடிகர் பிரபு திரைப்படங்கள் பட்டியல், பிரபு மனைவி, நடிகர் பிரபு நேபால் விக்கிபீடியா, பிரபு மகன், பிரபு பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் திரைப்படம்
ரஹ்மானுடன் பிரபு


Also read... மெகா ஸ்டாரின் குடும்பத்தை ஒட்டுண்ணிகள் என்று விமர்சித்த பிரபல இயக்குனர்!

பொன்னியின் செல்வனில் நடிக்கும் ரகுமான் பிரபுடன் எடுத்த செல்பியை வெளியிட்டுள்ளார். அதில்தான் பிரபுவின் ஸ்லிம் தோற்றம் இடம்பெற்றுள்ளது. குஷ்புவைப் போன்றே இவரும் பத்து வயது குறைந்தது போல் காட்சியளிக்கிறார்.

இளம் நடிகர்களின் பிட்னெஸ்ஸைவிட இந்த சீனியர் நடிகர்களின் ஸ்லிம்மான தோற்றம் நடுத்தர வயது தாண்டியவர்களுக்கு நிச்சயம் உடல் இளைப்பதற்கான உத்வேகத்தை தரும்.
Published by:Vinothini Aandisamy
First published: