தமிழ் திரையுலகில் எண்பது திரைப்படங்களும்மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்வர்த்தி இன்று அதிகாலை மும்பையில் காலமானார். அவருக்கு வயது 62.
சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி. ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார். சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார். இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார் அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார் அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க - TV movies : மே தினம் ஸ்பெஷல் திரைப்படங்கள்... போட்டிப்போடும் அஜித், சூர்யா, சிம்பு!
மகன்கள் சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்ஸி படித்து வருகிறார்.
இதையும் படிங்க - KRK Trailer: ஐ லவ் யூ டூ, ஐ மேரி டூ... காத்து வாக்குல ரெண்டு காதல் ட்ரைலர்!
கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற ஹிட் பாடலில் ராதிகாவுடன் நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. சக்ரவர்த்தியின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.