ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சர்ச்சைக்குரிய இயக்குனர் படத்தில் செல்வராகவன்?

சர்ச்சைக்குரிய இயக்குனர் படத்தில் செல்வராகவன்?

செல்வராகவன்

செல்வராகவன்

ருத்ர தாண்டவம் இயக்குனரின் படத்தில் செல்வராகவன் நடிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகனின் புதிய படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கலாம் என்கின்றன செய்திகள்.

இயக்குனராக ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த செல்வராகவனும் நடிகராகிவிட்டார். அவரது நடிப்பில் சாணிக்காயிதம் படம் விரைவில் வெளிவர உள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் என்பதால் இந்தப் படம் திரையரங்குக்குப் பதில் ஓடிடியில் வெளிவர சாத்தியமிருப்பதாக முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சாணிக்காயிதத்தைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் செல்வராகவன் நடிக்கிறார். அத்துடன் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்குகிறார். செல்வராகவன் ரசிகர்கள் அவரது படங்கள் வெளியாகாத நிலையில் அவர் போடும் காதல் காய ட்வீட்களை வைத்து திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். சமீபத்தில்கூட, 'வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் நாம்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்களின் பாவத்தை நாம் சுமந்தது போதும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மனதை குத்திக் கிழித்து உடைத்து சுக்குநூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது' என ட்வீட் செய்துள்ளார். அதற்கு அமோக வரவேற்பு. செல்வராகவன் ரசிகர்கள் அனைவருக்கும் குத்திக் கிழித்த சுக்குநூறாய் உடைந்த காதல் இருக்கும் போல.

  also read : மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற! அமலா பாலின் புகைப்படங்கள்..

ருத்ர தாண்டவம் இயக்குனரின் படத்தில் செல்வராகவன் நடிக்கக்கூடும் என்ற தகவல் வெளிவந்த நிலையில், இன்று மாலை தனது அடுத்தப் படம் குறித்த முக்கிய செய்தியை வெளியிட இருப்பதாக அந்த இயக்குனர் தெரிவித்துள்ளார். ஆக, மாலையில் செல்வராகவன் அந்த இயக்குனரின் படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது உறுதியாக தெரிந்துவிட வாய்ப்புள்ளது. இயக்குனர் மோகன் சமூக வலைத்தளங்களில் பேசும் கருத்துக்கள் சர்ச்சையாகியது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cinema, Selvaraghavan