ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்...!

மீண்டும் வில்லனாகும் செல்வராகவன்...!

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன் நடிப்புடன் தனுஷின் நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். நடிப்பதற்கு அவர் கால்ஷீட் தருவதை பார்த்தால் முழுநேர நடிகராகிவிடுவார் என்றே தோன்றுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இயக்குனராக தடம் பதித்த செல்வராகவன் விரைவில் மேலுமொரு படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார்.

இயக்கத்தில் சரிவை சந்திக்கையில் இயக்குனர்கள் நடிப்புப் பக்கம் கவனம் செலுத்துவது தொன்றுதொட்டோ இருந்துவரும் பழக்கம். மணிவண்ணன், சுந்தர்ராஜன் என ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இயக்குனர்கள் இறுதியில் முழுநேர நடிகர்களானார்கள்.

ரவிமரியா, சிங்கம்புலி. சேரன், வெடிகுண்டு முருகேசன் மூர்த்தி, திருடா திருடி சுப்பிரமணியம் சிவா என சமீபகால உதாரணங்களும் உண்டு. கௌதமும் இப்போது இயக்கம் அளவுக்கு நடிப்பிலும் கவனம் செலுத்துகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் சரியாகப் போகவில்லை. அதைவிட முக்கியம் இரண்டு படங்களுக்கிடையில் விழுந்த பலவருட இடைவெளி.

இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் நடித்த அப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இதையடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நெகடிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ருத்ர தாண்டவம் படத்தை இயக்கிய இயக்குனரின் புதிய படத்தில் செல்வராகவன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Also read... ஜனவரி 7 ஓடிடியில் வெளியாகும் புஷ்பா...!

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இதில் பிரதான வேடத்தில் ஜித்தன் ரமேஷும், ஐஸ்வர்யா ராஜேஷு ம் நடிக்க உள்ளனர். இதில் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.

Also read... பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய பிரபாஸின் ராதே ஷ்யாம்...!

செல்வராகவன் நடிப்புடன் தனுஷின் நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். நடிப்பதற்கு அவர் கால்ஷீட் தருவதை பார்த்தால் முழுநேர நடிகராகிவிடுவார் என்றே தோன்றுகிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director selvaragavan