அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிய செல்வராகவன்... உருவாகிறதா தனுஷின் புதிய படம்!

news18
Updated: November 6, 2019, 5:29 PM IST
அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிய செல்வராகவன்... உருவாகிறதா தனுஷின் புதிய படம்!
தனுஷ் மற்றும் செல்வராகவன்
news18
Updated: November 6, 2019, 5:29 PM IST
அடுத்த படத்தின் வேலைகளைத் துவங்கியிருப்பதாக இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் செல்வராகவன். தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த செல்வராகவன் தனித்துவமான படைப்பாற்றலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இறுதியாக சூர்யாவை நாயகனாக வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கிய செல்வராகவன் மீண்டும் தனுஷை இயக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் தனது அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் தனுஷ் படம் தொடங்கிவிட்டதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பே பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வரும் தனுஷ், அடுத்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Also see:

First published: November 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...