ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'ஒழுக்கத்த விட்டோம் எல்லாம் நாசமா போயிடும்’... சர்ச்சை வசனங்கள் நிறைந்த பகாசூரன் ட்ரெய்லர்!

'ஒழுக்கத்த விட்டோம் எல்லாம் நாசமா போயிடும்’... சர்ச்சை வசனங்கள் நிறைந்த பகாசூரன் ட்ரெய்லர்!

பகாசூரன்

பகாசூரன்

ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் பல சர்ச்சை வசனங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் முன்னதாக வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றது.

Also read... கமல் சாரை சாகிற வரைக்கும் என்னால மறக்க முடியாது என்று வடிவேலு சொல்ல காரணம் தெரியுமா?

இந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் படத்தின் டிரைலரை நேற்று வெளியிட்டுள்ளனர். ஆன்லைன் ஆப்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொழில் குறித்த கதையை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உறுதி செய்கிறது. பாலியல் தொழிலாளியாகும் கல்லூரி மாணவிகள் குறித்தும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்தும் பேசும் வகையில் ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெண்களை ஏமாற்றுபவர்களை பழிவாங்கும் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.

மோகன்.G இயக்கிய திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களில் இடம்பெற்ற காட்சிகளும், வசனங்களும், கதையும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தின.  அதுபோலவே இந்த பகாசூரன் திரைப்படமும் சர்ச்சையை கிளப்பும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Director selvaragavan, Tamil Movies Trailer