இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடிக்கும் பகாசுரன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது நடிகராக கலக்கி வருகிறார். சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடிப்பில் மிரட்டி இருப்பார். இந்த படம் அவருக்கு நடிகராக நல்ல பெயரை பெற்று தந்தது.
இதேபோன்று விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது இந்த நிலையில் இயக்குனர் மோகன். ஜி இயக்கத்தில் தற்போது ‘பகாசுரன்’ என்ற படத்தில் செல்வராகவன் நடித்துள்ளார்.
கருப்பு வெள்ளை உடையில் கண்களை கவரும் ஷிவானி நாராயணன்..
இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் பகாசூரன் படத்திலிருந்து அடுத்த பாடல் திங்களன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார்.
#Kaathama lyric video from Monday.. #Bakasuran 🤩 @SamCSmusic @ProBhuvan @Mrtmusicoff @Gmfilmcorporat1 pic.twitter.com/Cg9Z4Q9GAJ
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 15, 2022
பகாசூரன் படத்தில் செல்வராகவனுடன் மன்சூர்அலிகான், ராதாரவி, நட்டி நடராஜ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பீஸ்ட் பட நடிகர்… பெண் இயக்குனர்கள் பற்றி பேசியதால் சிக்கல்…
இயக்குனர் மோகன். ஜி ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார். இதனால் பகாசுரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director selvaragavan