விஜய்யின் பீஸ்ட் படத்தில் இணைந்த செல்வராகவன்...!

செல்வராகவன்

அனிருத் இசையில் தயாராகிவரும் பீஸ்டில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். 2022 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தில் செலவ்ராகவனும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்த அப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதற்கு முன் அவர் இயக்கிய என்ஜிகேயும் தோல்வியடைந்தது. அதற்குமுன் இயக்கிய இரண்டாம் உலகம் கடும் நஷ்டத்தை அடைந்தது. இதனிடையில் சாணிகாயிதம் படத்தில் நடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடுத்து அவர் இயக்குவதாக இருந்த தனுஷின் நானே வருவேன் திரைப்படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது தெரியவில்லை. செல்வராகவன் போல் இயக்கத்தில் பின்னடைவு அடைந்தவர்களின் புகலிடமாக நடிப்பு உள்ளது. செல்வராகவனும் அந்த புகலிடத்துக்கு வந்துவிட்டாரோ என்ற ஐயத்தை பீஸ்ட் படத்தில் அவர் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி உறுதி செய்கிறது.

Also read... நானி தயாரிக்கும் ஆந்தாலஜியில் நடிக்கும் சத்யராஜ்...!

பீஸ்ட் படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு சென்னை இசிஆர் பகுதியில் நடந்து வருகிறது. இரு தினங்கள் முன்பு இந்தப் படப்பிடிப்பில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கலந்து கொண்டார். தற்போது செலவராகவன் இணைந்திருக்கிறார். அனிருத் இசையில் தயாராகிவரும் பீஸ்டில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். 2022 பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: