Home /News /entertainment /

நானே வருவேன் படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்!

நானே வருவேன் படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட செல்வராகவன்!

செல்வராகவன்

செல்வராகவன்

புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் - செல்வராகவன் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
நானே வருவேன் திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக செல்வராகவன் அறிவித்திருக்கிறார். 

புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் - செல்வராகவன் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

நானே வருவேன் திரைப்படத்தை செப்டம்பர் 29-ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகளை முடிக்கும் வேளையில் இயக்குநர் செல்வராகவன் இறங்கியுள்ளார்.

அதில் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகளை முடித்த செல்வராகவன், தற்போது யுவன் சங்கர் ராஜாவுடன் பின்னணி இசை கோர்ப்பு பணியில் இணைந்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவில் பின்னணி இசை கோர்ப்பு வேலையில் இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.



மேலும் பின்னணி இசைக்காக Maestro வுடன் பணியாற்றுகிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.  நானே வருவேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Also read... Ajith - 61: இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக தாய்லாந்து செல்கிறார் அஜித்!

குறிப்பாக அண்ணன் - தம்பி ஆகிய இரண்டு கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். மேலும் செல்வராக வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dhanush, Director selvaragavan, Yuvan Shankar raja

அடுத்த செய்தி