தனது பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்றவர் இயக்குநர் செல்வராகவன். தமிழ் சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற, இயக்குநர்களில் ஒருவரான அவர், தனது தனித்துவமான படைப்பால் பாராட்டப்படுகிறார்.
இந்தியில் ரீமேக்காகும் அருவி! ஹீரோயின் யார் தெரியுமா?
நேற்று செல்வராகவன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். மேலும் அவரது ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் 5 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு நேற்று வெளியானது. இதையெல்லாம் சேர்த்து செல்வராகவன் தனது பிறந்தநாளை இன்னும் சிறப்பாகக் கொண்டாடினார்.
தேசிங்கு பெரியசாமி – நிரஞ்சனிக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
அவரின் பிறந்தநாளை சிறப்பாக்க இன்னுமோர் முக்கியமான விஷயம் உள்ளது. அதாவது நடிகராக செல்வராகவன் தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடினார். படக் குழுவினரோடு கேக் வெட்டி அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள ’சாணி காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்