தனது வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். இவருக்கென ரசிகர்களும் ஏராளம். இதுவரை திரைக்குப் பின்னால் இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஏற்கெனவே இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இன்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து சாணிக்காயிதம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் புகைத்தபடி கையில் துப்பாக்கியுடன் நடிகர் செல்வராகவன் அமர்ந்திருக்க அவருக்கு அருகே ரத்தக் கறை படிந்த கால்கள் இருக்கின்றன.
இந்த போஸ்டரை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், உங்களை ஒரு அற்புதமான இயக்குநராக அறிந்ததில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது ஒரு மிகச் சிறந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறியுள்ளார். அவரைத்தொடர்ந்து பல்வேறு திரைத்துறை பிரபலங்களும், ஏராளமான ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
Here’s wishing my partner in crime a very Happy Birthday!!!
முன்னதாக சாணிக்காயிதம் படத்தின் ஸ்கிரிப்டை படித்த செல்வராகவன் அசாதாரணமாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதுநாள் வரை திரைக்கு பின்னால் இருந்து நட்சத்திரங்களை இயக்கி வந்த செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாவதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.