முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகராக தனுஷை வெல்வாரா செல்வராகவன் ? - வெளியான சுவாரசியத் தகவல்

நடிகராக தனுஷை வெல்வாரா செல்வராகவன் ? - வெளியான சுவாரசியத் தகவல்

செல்வராகவன் - தனுஷ்

செல்வராகவன் - தனுஷ்

நடிகராக தம்பி தனுஷை வெல்வாரா அண்ணன் செல்வராகவன் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'பழைய வண்ணாரப் பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. ஒவ்வொரு முறை இவர் படம் வெளியாகும்போது, படத்தில் பேசப்படும் கருத்துகளால் அடிக்கடி சர்ச்சைகளை சந்திப்பது வழக்கம். அடுத்ததாக இயக்குநர் செல்வராகவன், நட்டி நடராஜ் நடிப்பில் பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள பகாசூரன் பட போஸ்டர்

இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் வாத்தி பட போஸ்டர்

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்குவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ''திரௌபதி தாய் மற்றும் ஈசன் அருளுடன் பகாசூரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தனுஷின் வாத்தி திரைப்படமும் வருகிற 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. வாத்தி படம் தெலுங்கில் சார் என்ற பெயரில் வெளியாகிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்த நிலையில் நடிகராக தம்பி தனுஷை வெல்வாரா அண்ணன் செல்வராகவன் என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.

First published:

Tags: Actor dhanush, Director selvaragavan