தமிழ் சினிமாவில் தன் 20 ஆண்டு கால பயணத்தை கடந்த இயக்குனர் செல்வ ராகவனின் திரைப் பயணத்தை பற்றி பார்ப்போம்.
2002 ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையில் தடம் பதித்தார் செல்வராகவன் தனுஷ் கதை நாயகனாக அறிமுகமான திரைப்படமும் இதுவே. வெவ்வேறு குடும்ப பின்னணியை கொண்ட நான்கு இளைஞர்கள், மற்றும் ஒரு பெண். என பள்ளி மாணவர்களான. இவர்களுக்குள் நடைபெறும் பருவ மாற்றம், சமூகத்துடன் உறவு என பல்வேறு விஷயங்களை ஆழமாக பேசி விமர்சனத்துக்கும் உள்ளானது செல்வராகவனின் இந்த ’துள்ளுவதோ இளமை’.
'காதல் இல்லை, இது காமம் இல்லை - இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை' என்று ரசிகர் பட்டாளத்தை புலம்ப வைத்த திரைப்படமாக அமைந்தது செல்வராகவனின் இரண்டாவது படைப்பான ‘காதல் கொண்டேன்'. தனுஷ் ஹீரோவாக தனக்கென ஒரு இடம் பிடிக்க காரணமாகவும் இத்திரைப்படம் அமைந்தது.
காதலை கண்ணீருடன் சொன்ன ’7 ஜி ரெயின்போ காலனி’ மற்றும் கேங்க்ஸ்டர் கதைக் களத்தை அரசியல் அதிரடிகளுடன் கலந்து ரத்தமும் சதையுமாக கொடுத்த ‘புதுப்பேட்டை’ இவ்விரண்டு திரைப்படங்களும் செல்வராகவனின் மாஸ்டர் பீஸ் படைப்புகளாகின.
தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை வென்ற பிந்து மாதவி!
பேன்டசி கதைகளை எடுக்க தமிழ் சினிமா தயங்கிய காலத்தில் 12-ம் நூற்றாண்டின் சோழ பேரரசின் பின்னணியை மையப்படுத்தி ஒரு அழுத்தமான கதையைப் படைத்திட்ட செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ பாகுபலியின் முன்னோடி என சொல்லலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கற்பனை உலகங்களுக்கு வண்ணம் அடித்த ‘இரண்டாம் உலகம்’, லட்சியங்கள் ஒரு தியானம் என சொன்ன ‘மயக்கம் என்ன’ விவசாயத்தின் முக்கியம் சொல்லி அரசியலில் களை எடுத்த ’என்.ஜி.கே’ மற்றும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என தன் ஒவ்வொரு படைப்பிலும் தன் டிரேட் மார்க் திரைக்கதை உத்தியை பதித்த செல்வராகவனை ’ ஜீனியஸ் இயக்குனர்’ என பாராட்டியது தமிழ் சினிமா.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director selvaragavan