Home /News /entertainment /

மோகன்.ஜி படத்தில் ஹூரோவாகும் செல்வராகவன்..

மோகன்.ஜி படத்தில் ஹூரோவாகும் செல்வராகவன்..

மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக செல்வராகவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக செல்வராகவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் ஜி இயக்கத்தில் ஹீரோவாக செல்வராகவன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன்.ஜி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தனது நான்காவது படத்தில் இயக்குநர் செல்வராகவனை ஹூரோவாக வைத்து இயக்க இருக்கிறார்.

    இதுதொடர்பாக மோகன்.ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக, செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது அடுத்த படத்தில் நாயகனாக செல்வராகவன் நடிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.



    மோகன்.ஜி இயக்கத்தில் வெளிவந்த திரெளபதி, ருத்ர தாண்டவம் ஆகிய இரண்டு படங்களும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டிய படம் என்ற பெயரைப் பெற்றது. மேலும், இரண்டு படங்களும் சாதி, மத ரீதியான விஷயங்கள் குறித்து பேசியதால் கடும் விமர்சனங்களும் எழுந்தன.

    ஏற்கனவே, செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தில் ஹூரோவாக நடித்துள்ளார். விஜய்யின் பீஸ்ட் படத்திலும் நடித்து வருவதாக தகவ்கள் தெரிவிக்கின்றன.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Director mohan, Selvaraghavan

    அடுத்த செய்தி