ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தனுஷ் படம் குறித்து சேகர் கம்முலா வெளியிட்ட அப்டேட்...!

தனுஷ் படம் குறித்து சேகர் கம்முலா வெளியிட்ட அப்டேட்...!

தனுஷ், சேகர் கம்முலா

தனுஷ், சேகர் கம்முலா

சேகர் கம்முலா எந்த நடிகருடன் இரண்டாவது படம் செய்ததில்லை என்பதால் இந்த அறிவிப்பு முக்கியமானதாக கருதப்பட்டது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தனுஷ் சேகர் கம்முலா உள்பட அரை டஜன் இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். இதில் யார் படம் முதலில் என்பது தனுஷுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்நிலையில், தனுஷ் படம் குறித்த அப்டேட்டை அளித்துள்ளார் சேகர் கம்முலா.

கர்ணனுக்குப் பிறகு ஹாலிவுட் படம் தி க்ரேமேனை முடித்தார் தனுஷ். யுஎஸ்ஸிலிருந்து திரும்பியவர் நேராக ஹைதராபாத்தில் நடைபெற்ற கார்த்திக் நரேனின் மாறன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரை வைத்து பான் - இந்தியா படத்தை இயக்கப்போகும் சேகர் கம்முலாவும், அப்பட தயாரிப்பாளர்களும் ஹைதராபாத்தில் தனுஷை சந்தித்தனர். இதனால், அடுத்து தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் தனுஷ், மித்ரன் கே ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு கால்ஷீட் தந்தார். அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது இன்னும் தெரியாத ரகசியமாகவே உள்ளது. இந்நிலையில், சேகர் கம்முலா, அடுத்து தனுஷை வைத்து படம் இயக்குவதாக அறிவித்துள்ளார். இவர் நாகசைன்யாவை வைத்து இயக்கியுள்ள லவ் ஸ்டோரி செப்டம்பர் 24 வெளியாகிறது.

Also read... வாடிவாசலை தள்ளி வைத்துவிட்டு சிவா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா?

இதையடுத்து மீண்டும் நாக சைன்யாவுடன் இணைந்து ஒரு படம் செய்யவிருப்பதாக கூறினார். சேகர் கம்முலா எந்த நடிகருடன் இரண்டாவது படம் செய்ததில்லை என்பதால் இந்த அறிவிப்பு முக்கியமானதாக கருதப்பட்டது. . உங்களின் அடுத்தப் படமே நாக சைதன்யா உடனா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், இல்லை, அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அதன் பிறகே நாக தைன்யா படம் என தெரிவித்தார்

சேகர் கம்முலாவின் அடுத்தப் படம் தனுஷுடன் என்பது உறுதி. ஆனால், அதற்குள் தனுஷ் எத்தனை பேர் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரோ தெரியவில்லை.

First published:

Tags: Actor dhanush