Home /News /entertainment /

சீதா ராமம் கொடுத்த வெற்றி... மகிழ்ச்சியில் படக்குழு

சீதா ராமம் கொடுத்த வெற்றி... மகிழ்ச்சியில் படக்குழு

சீதா ராமம்

சீதா ராமம்

சீதாராமன் கதை கேட்ட உடன் இது காவிய காதல் கதை என்று புரிந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சீதா ராமம் திரைப்படம் தமிழகத்தில் வெற்றியடைந்தது மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த சீதா ராமம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தாலும் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.  இருந்தாலும் சீதா ராமம் திரைப்படத்தின் டப்பிங் நேரடி தமிழ் படம் போலே இருப்பதாக பாராட்டுக்கள் கிடைத்தன.

3 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் முக்கிய அப்டேட்!

அதேபோல் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக சீதா ராமம் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் நான்கு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.  அதேபோல் உலக அளவில் 35 கோடி வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.  இந்த நிலையில் படத்தின் நாயகன் துல்கர் சல்மான்,  இயக்குநர் ஹனு ராகவபுடி,  இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் மற்றும் லைக்கா நிறுவனத்தை சேர்ந்த தமிழ் குமரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

seetha ramam success meet Dulquer Salmaan Mrunal Thakurs Sita Ramam tamil Movie
சீதா ராமம் படக்குழு


அதில் பேசிய இயக்குனர் சீதா ராமம் திரைப்படம் தமிழகத்தில் வெற்றியடைந்தது மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாக தெரிவித்தார். இந்த அனுபவமும் வரவேற்பும் மறக்க முடியாத நிகழ்வாக இருப்பதாகவும் தரமான படைப்புகளாக இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  அத்துடன் படத்தின் வெற்றிக்கு மதன் கார்க்கி வசனம் மற்றும் விஷால் சந்திரசேகரின் இசை ஆகியவை பக்கபலமாக இருந்ததாகவும் பாராட்டினார்.

jailer : ரஜினி படத்தில் இணையும் தமன்னா.. ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட்!

துல்கர் சல்மான் பேசவையில் பல சவால்களுக்கு மத்தியில் இந்த திரைப்படத்தை எடுத்ததாகவும், படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் வேலை செய்தது பாக்கியம், ஒரு கனவு போந்து என்றும் பெருமிதம் அடைந்தார். அத்துடன் இயக்குநர் கதை கூறிய போதே இது ஒரு காதல் காவிய கதை என புரிந்தது. இதுவரை கேட்காத கதையாக இருந்தது. இயக்குநர் தன்னுடைய அடிமனதில் இருந்து சீதா ராமம் கதையை எழுதியிருந்தார் என பாராட்டினார்.

seetha ramam success meet Dulquer Salmaan Mrunal Thakurs Sita Ramam tamil Movie
துல்கர்


அதேபோல் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், ரசிகர்கள் படத்தில் இடம்பெறும் இசையை தனி தனியாக பாராட்டுகின்றனர். இதற்கு முன் இது போன்ற ஒரு வரவேற்பு தனக்கு கிடைத்ததில்லை.  தற்போது அதிக பாராட்டுக்கள் கிடைப்பதாக நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் அடுத்த படங்களுக்கும் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை சீதா ராமம் படத்தின் வெற்றி கொடுத்திருக்கிறது எனவும் கூறினார். இந்தப் படம் இரண்டாவது வாரத்தில் தமிழகத்தில் 120 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்களk செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Dulquer Salmaan, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி