Home /News /entertainment /

விஜய் சேதுபதியின் மாமனிதன் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

விஜய் சேதுபதியின் மாமனிதன் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி

கண்ணே கலைமானே படத்தின் தோல்விக்குப் பிறகு சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கினார்.

    சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் குறித்த அப்டேட்டை சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார்.

    விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி 2013-ல் இயக்கிய, இடம் பொருள் ஏவல் இன்னும் வெளியாகவில்லை. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் அது. உத்தம வில்லன் அவர்களை நஷ்டமாக்கியதில் இடம் பொருள் ஏவல் பலியானது. விஜய் சேதுபதியுடன் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா என பலரும் அதில் நடித்திருந்தனர். ஓடிடியாலும் அப்படத்தை மீட்டுக் கொண்டுவர முடியும் என தெரியவில்லை.

    இந்நிலையில், கண்ணே கலைமானே படத்தின் தோல்விக்குப் பிறகு சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் என்னானது என்பது தெரியாமல் இருந்தது. விஜய் சேதுபதி அதன் பிறகு ஒன்றரை டஜன் படங்கள் நடித்து, வெளிவந்தும் விட்டன. சீனு ராமசாமி இடிமுழக்கம் என்ற படத்தை எடுத்து முடித்துவிட்டார். அடுத்தப்பட அறிவிப்பு விரைவில் வர உள்ளது. எனில் மாமனிதன் கதி...? இன்னொரு இடம் பொருள் ஏவலா...?

    நல்லவேளை, அப்படி எந்த அசம்பாவிதமும் இல்லை. நேற்று மாமனிதன் குறித்த அப்டேட்டை சீனு ராமசாமி வெளியிட்டார்.



    '37 நாள் படப்பிடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படம். எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் அவர்களும் நானும் படத்தை எடிட்டிங் செய்து இனிதே மற்றப் பணிகளும் நிறைவடைந்து திரை தொட காத்திருக்கிறது. அடுத்த வாரம் சென்சார் போகிறது' என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    ஆக, மாமனிதன் விரைவில் திரைக்கு வரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor vijay sethupathi

    அடுத்த செய்தி