யுவன் சங்கர்ராஜாவுக்கும் எனக்கும் பிரச்னையா? - சீனுராமசாமி விளக்கம்

யுவன் சங்கர்ராஜாவுடன் என்ன பிரச்னை என்று தன்னிடம் கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு இயக்குநர் சீனு ராமசாமி பதிலளித்துள்ளார்.

யுவன் சங்கர்ராஜாவுக்கும் எனக்கும் பிரச்னையா? - சீனுராமசாமி விளக்கம்
யுவன் சங்கர்ராஜா | சீனுராமசாமி
  • Share this:
யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாமனிதன். தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

இளையராஜா - யுவன் சங்கர்ராஜா இணைந்து மாமனிதன் படத்துக்கு இசையமைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டை தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று  கூறி யுவன் சங்கர்ராஜாவை டேக் செய்திருந்தார் இயக்குநர் சீனு ராமசாமி.

மேலும் அந்த ட்விட்டர் பதிவில், “மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசையை இசைஞானி இளையராஜா முடித்து விட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு அரேஞ்ச்மெண்ட்ஸ் செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை” என்று சீனுராமசாமி கூறியுள்ளார்.


இதனிடையே உங்களுக்கும் யுவனுக்கும் என்ன பிரச்னை என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த சீனு ராமசாமி, எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.மேலும் படிக்க: ‘திரையரங்குகளை புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல...’ OTT ரிலீஸ் பற்றி வாய் திறந்த சூர்யா
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading