’விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் கொலை மிரட்டல்’ - சீனு ராமசாமி விளக்கம்..

காவல் நிலையத்திலும் முதல்வர் அலுவலகத்திலும் புகார் அளிக்க இருப்பதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுப்பது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

’விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் கொலை மிரட்டல்’ - சீனு ராமசாமி விளக்கம்..
இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி
  • News18
  • Last Updated: October 28, 2020, 1:45 PM IST
  • Share this:
விஜய்சேதுபதியை 800 திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலமாக விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்த நபர்களில் ஒருவர் சீனு ராமசாமி.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவருவதற்கு முன்பாகவே முத்தையா முரளிதரனின் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜயசேதுபதிக்கு டிவிட்டர் வாயிலாக கோரிக்கையை வைத்திருந்தார். அதன்பின் பல தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகி விட்டார். ஆனாலும் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் யார் அந்த மிரட்டல்களை விடுக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சீனு ராமசாமி தற்போது பேட்டி அளித்துள்ளார்.

Also read... ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: ரஜினிகாந்த் விரைவில் கட்சித் தொடங்குவார் - ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்இன்று காலை திடீரென ட்விட்டரில் தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருப்பதாக சீனு ராமசாமி பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ட்விட்டரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு சிலர் ஆபாசமாக திட்டுவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்திலும் முதல்வர் அலுவலகத்திலும் புகார் அளிக்க இருப்பதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். கொலை மிரட்டல் விடுப்பது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அல்ல என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

இது குறித்து விஜய் சேதுபதியிடம் பேசியபோது "இதெல்லாம் மிகவும் சாதாரணம். கண்டுக்காதீங்க" என்று அவர் தெரிவித்ததாகவும் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading