ஜீ.வி.பிரகாஷின் ஆக்ஷன் த்ரில்லர் - சீனு ராமசாமி வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

சீனு ராமசாமி

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை.

  • News18
  • Last Updated :
  • Share this:
உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி வந்த சீனு ராமசாமி முதல்முறையாக ஆக்ஷன் த்ரில்லர் பக்கம் திரும்பியுள்ளார். தனது புதிய படத்தின் நாயகி யார் என்பதை இன்று அவர் தெரிவித்துள்ளார். 

கூடல் நகர் தொடங்கி மாமனிதன்வரை சீனு ராமசாமி இயக்கி படங்கள் அனைத்தும் கிராமத்துப் பின்னணியில் மனிதர்களின் உணர்வுகளை பேசுபவை. அவருக்கே அது போரடித்திருக்கும் போல. இந்தமுறை ஆக்ஷன் த்ரில்லர் பக்கம் திரும்பியுள்ளார். அப்போதும் கிராமத்தை விடவில்லை. கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதையாம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை. படத்துக்கு ரகுநந்தன் ஒளிப்பதிவு செய்ய, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இசை ஜீ.வி.பிரகாஷ். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் படத்தை தயாரிக்கிறது.

Also read... நயன்தாரா படத்துக்கு இத்தனை கோடிகளா? - ஆச்சரியத்தில் திரையுலகம்!இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடிப்பதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். 18 சயசு படத்தில் அறிமுகமான இவர் விஜய் சேதுபதியுடன்தான் அதிக படங்களில் நடித்தார். அவரது துக்ளக் தர்பார், மாமனிதன் படங்களிலும் காயத்ரிதான் நாயகி. மாமனிதனை தொடர்ந்து சீனு ராமசாமியின் புதிய படத்திலும் நாயகியாகியுள்ளார். அவர் நர்ஸாக  நடிக்கயிருக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published: