• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘இடிமுழக்கம்’!

சீனு ராமசாமி - ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘இடிமுழக்கம்’!

இடிமுழக்கம்

இடிமுழக்கம்

இந்தப் படத்துக்கு 'இடிமுழக்கம்' எனத் தலைப்பிட்டுள்ளது.

  • Share this:
    இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ’இடிமுழக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனியில் முடிந்தது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரகுநந்தன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்காக வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் படத்தில் பெயரை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.



    இந்தப் படத்துக்கு 'இடிமுழக்கம்' எனத் தலைப்பிட்டுள்ளது. இதனை நடிகரும், சேப்பாக்கம் / திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வும் ஆன உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொடைக்கானலில் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், அடுத்தகட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெறவுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: