Home /News /entertainment /

’திருமணம் ஆனதாக பேஸ்புக்கில் வந்த திடீர் பதிவு...' இயக்குநர் சீனுராமசாமி விளக்கம்

’திருமணம் ஆனதாக பேஸ்புக்கில் வந்த திடீர் பதிவு...' இயக்குநர் சீனுராமசாமி விளக்கம்

இயக்குநர் சீனு ராமசாமி

இயக்குநர் சீனு ராமசாமி

தனது பேஸ்புக் பக்கத்தில் திருமணமானதாக அப்டேட் செய்யப்பட்ட தகவல் குறித்து இயக்குநர் சீனு ராமசாமி விளக்கமளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றிய சீனு ராமசாமி 2007-ம் ஆண்டு வெளியான ‘கூடல் நகர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது இரண்டாவது படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ இவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. அதுமட்டுமின்றி இன்று முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதியை அந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்து, பின்னர் அவருக்கு மக்கள் செல்வன் பட்டம் கொடுத்ததும் இவரே.

    நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட எதார்த்த சினிமாவை படைத்து முன்னணி இயக்குநராக வலம் வரும் சீனுராமசாமி அடுத்ததாக விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா, யுவன்சங்கர்ராஜா இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கிறது.

    ட்விட்டர், பேஸ்புக் ஆகிய சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் சீனுராமசாமி. இந்நிலையில் இவரது பேஸ்புக் பக்கத்தில் திருமணம் நடந்ததாக (Got Married) என அப்டேட் செய்யப்பட்டிருந்தது. பின் தொடர்பவர்கள் பலரும் சீனுராமசாமிக்கு திருமணமா என ஆச்சர்யத்துடன் பார்க்க அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே விளக்கமளித்துள்ளார்.



    சீனு ராமசாமியின் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன்.அப்டேட் டவுன் லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்.” என்று கூறியுள்ளார்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Kollywood, Seenu ramasamy

    அடுத்த செய்தி