'மனி ஹீஸ்ட்' தொடரில் தமிழ் நடிகர்கள் வெர்ஷன் - வீடியோ

மனி ஹீஸ்ட் நட்சத்திரங்களுடன் தமிழ் நட்சத்திரங்களை ஒப்பிட்டு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது

  • Share this:
நெட்ஃப்ளிக்ஸில் மிகப்பெரிய ஹிட் தொடராக கொண்டாடப்படுவது கொள்ளைக்காரர்களின் கதையை மையப்படுத்திய மனி ஹீஸ்ட் (Money Heist).

இத்தொடருக்கு உலகம் முழுவதும் மிகப் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இத்தொடரில் இடம்பெற்ற ப்ரொஃபஸர் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்திய திரை நட்சத்திரங்களில் யார்? ப்ரொஃபஸர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த இயக்குநர் அலெக்ஸ் ரோட்ரிகோ, நடிகர் விஜய் சரியாக இருப்பார் என தெரிவித்தார். பொகோட்டா கதாபாத்திரம் அஜித்துக்கும், போலீஸாக வரும் சுவாரஸ் கதாபாத்திரம் சூர்யாவுக்கும் சரியாக இருக்கும் என்றும் பெர்லின் கதாபாத்திரம் ஷாருக் கானுக்கும், டென்வெர் கதாபாத்திரத்துக்கு ரன்வீர் சிங் பொருத்தமாக இருப்பார்கள் என்றும் அலெக்ஸ் ரோட்ரிகோ குறிப்பிட்டார்.


இந்த பதில் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மனி ஹீஸ்ட் நட்சத்திரங்களுடன் தமிழ் நட்சத்திரங்களை ஒப்பிட்டு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் மணி ஹெய்ஸ்ட் தொடரின் டோக்கியா கேரக்டரில் தமன்னாவும், பெர்லின் கேரக்டரில் அஜித்தும், மாஸ்கோ கேரக்டரில் சீயான் விக்ரமும், டென்வர் கேரக்டரில் சிம்புவும், ரியா கேரக்டரில் ஆர்யாவும், ஹெல்சிங்கி கேரக்டரில் அரவிந்தசாமியும், நைரோபி கேரக்டரில் சமந்தாவும், ராக்வல் கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், புரபொசர் கேரக்டரில் விஜய்யும் நடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை அருண் சுரேஷ் குமார் உருவாக்கி யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading