Home /News /entertainment /

சிறப்பு திரையிடலில் மணிகண்டனின் கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த சீமான்!

சிறப்பு திரையிடலில் மணிகண்டனின் கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த சீமான்!

கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த சீமான்

கடைசி விவசாயி திரைப்படத்தை பார்த்த சீமான்

Kadaisi Vivasayi: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு கடைசி விவசாயி திரைப்படம் சிறப்பு திரையிடல் ஆக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அவர் மணிகண்டன்,விஜய் சேதுபதி மற்றும் படத்தில் பங்களிப்பு செலுத்திய தொழில்நுட்பக் கலைஞர்களை பாராட்டினார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
மணிகண்டன் தயாரித்து, எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் திரைப்படம் கடைசி விவசாயி. விவசாயம் வர்த்தகம் அல்ல வாழ்வியல் என்பதை இந்தத் திரைப்படத்தில் மணிகண்டன் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிப்ரவரி 11ஆம் தேதி நாளை இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.

கடைசி விவசாயியை சிறப்பு திரையிடலில் பார்த்த பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், திரையுலக பிரமுகர்களும் பாராட்டி வருகின்றனர். விவசாய பிரச்சனையை சொல்கிறேன் என்று கார்ப்பரேட் வில்லனை வீழ்த்தும் கதாநாயகனை காட்டும் படமல்ல இந்த கடைசி விவசாயி. விவசாயியின் வாழ்வியல் அவ்வூரின் வளமோடும், கலாச்சாரத்தோடும், கடவுள் நம்பிக்கையோடும் எப்படி பின்னிப்பிணைந்து இருக்கிறது என்பதை இந்தத் திரைப்படத்தில் அவர் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு கடைசி விவசாயி திரைப்படம் சிறப்பு திரையிடல் ஆக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அவர் மணிகண்டன்,விஜய் சேதுபதி மற்றும் படத்தில் பங்களிப்பு செலுத்திய தொழில்நுட்பக் கலைஞர்களை பாராட்டினார். இந்தத் திரையிடலின் போது மணிகண்டன், விஜய் சேதுபதி மற்றும் கடைசி விவசாயி படக்குழுவினர் உடன் இருந்தனர்.

Also read... ஹாலிவுட் உள்பட 12 இடங்களில் இசைக் கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்
விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சனையை கையில் எடுத்து அதை கதாநாயக பிம்பத்துடன் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் திரைப்படங்கள் தமிழில் வெளியாகின்றன. அப்படி எந்த நாயக பிம்பத்திலும் சிக்காமல் நல்லாண்டி என்ற முதியவரை நாயகனாக்கி இந்தத் திரைப்படத்தை மணிகண்டன் எடுத்துள்ளார் யோகி பாபு, விஜய் சேதுபதி போன்றவர்கள் இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதைக்காக, திரைப்பட கலைக்காக எந்த காம்ப்ரமைஸும் செய்யாத மணிகண்டனின் கடைசி விவசாயி போன்ற படங்கள் அதிகம் வரவேண்டும், வரவேற்பு பெற வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Vijay Sethupathi, Seeman

அடுத்த செய்தி