முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ''அதான் ரஜினியே சொல்லிட்டாரே...'' - சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்!

''அதான் ரஜினியே சொல்லிட்டாரே...'' - சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு பதிலளித்த சீமான்!

ரஜினிகாந்த் - விஜய் - சீமான்

ரஜினிகாந்த் - விஜய் - சீமான்

ஒரு உயர்ந்த கலைஞன் என்பவன் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர், வயதானவர் என அனைவராலும் ரசிக்கப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர் விஜய்தான் சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார் என்று தனது யூடியூப் பக்கத்தில் பேசியிருந்தார். இதனையடுத்து பிஸ்மியின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார், விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சூர்ய வம்சம் வெற்றி விழாவிலேயே பேசியதாக குறிப்பிட்டார். இதனால் சமூக வலைதளங்களில் யார் சூப்பர் ஸ்டார் என பெரும் விவாதங்கள் எழுந்தது.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் யார் சூப்பர் ஸ்டார் எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், அப்போ ரஜினிகாந்த், இப்போ என் தம்பி விஜய் என சட்டென பதிலளித்தார்.

மேலும், ''அது பட்டயம் இல்லை. அன்று தியாகராஜ பாகவதர் இருந்தார். அதன் பிறகு எம்ஜிஆர் வந்தார். பிறகு ரஜினிகாந்த் வந்தார். இப்போதைக்கு தமிழில் முதலிடத்தில் இருப்பது தம்பி விஜய். ஒரு தமிழர் வளர்ந்துவருவதை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

ரஜினிகாந்த்தே இதை ஒப்புக்கொள்வார். அவரது ரசிகர்கள் மறுக்கலாம். ரஜினிகாந்த்தே ஒரு மேடையில் விஜய் அந்த இடத்துக்கு வந்துவிட்டார் என பேசியிருக்கார். ஒரு உயர்ந்த கலைஞன் என்பவன் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர், வயதானவர் என அனைவராலும் ரசிக்கப்பட வேண்டும். அப்படி முதலில் எம்ஜிஆர் இருந்தாங்க, பின்னர் ரஜினி வந்தார். இப்போ என் தம்பி விஜய் இருக்கான்'' என பேசியுள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Rajini Kanth