ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நான் சொன்ன பிறகே மாற்றினார் - துணிவு இயக்குநர் வினோத் குறித்து சீமான் சொன்ன சுவாரசியத் தகவல்

நான் சொன்ன பிறகே மாற்றினார் - துணிவு இயக்குநர் வினோத் குறித்து சீமான் சொன்ன சுவாரசியத் தகவல்

வினோத் - சீமான்

வினோத் - சீமான்

இயக்குநர் வினோத் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்லிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படம் வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்துக்கான புரமோஷன்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ரசிகர்கள் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது, பாதையாத்திரை செல்வது என வித்தியாசமான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் பொள்ளாச்சியில் உள்ள திரையரங்கில் ஒரிஜினல் பணம் நோட்டு போல் டிக்கெட்ட அச்சிடப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கு திரையிடப்படுகிறது. மற்றொரு பக்கம் விஜய்யின் வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனம் முடிவெடுத்துள்ளன. இரண்டு நடிகர்களின் ரசிகர்களிடையே மோதல் ஏற்படக்கூடாது என வெவ்வேறு நேரங்களில் முதல் காட்சிகள் திரையிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துணிவு குறித்து சமீபத்தில் இயக்குநர் வினோத் அளித்த பேட்டி ஒன்றில் ரசிகர்களின் மோதல் போக்கு குறித்து பேசியுள்ளார். அதில், ''இங்க 15 டாப் நடிகர்கள் இருக்காங்க. அவங்களோட ரசிகர்கள் பண்ற அளவுக்கு ரூ.100 கோடி செலவழிச்சா கூட இப்படி விளம்பரப்படுத்த முடியாது. ஆனா திருப்பி ரசிகர்களுக்கு அந்த நடிகர்களாலும், தயாரிப்பு நிறுவனத்தாலும் என்ன பண்ண முடியும்? டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் கூட டூ மச் சினிமானு சொல்றாங்க இல்லையா? அது உண்மை.

இவ்ளோ நேரம் சினிமாவுக்கு செலவிட வேண்டியது இல்லை. ஒரு படம் நல்லா இருக்குனு சொன்னா போய் பார்க்கலாம். அதை நாலு பேருக்கு சொல்லலாம். இவ்ளோ தான் சினிமாவுக்கு நீங்க செலவு பண்ண வேண்டிய நேரம். இந்த நேரத்தை யாராலும் மீட்டுத் தர முடியாது. உங்கள் நேரத்தை உங்களை விட வேறு யாராலும் சிறப்பா பயன்படுத்த முடியாது'' என்று பேசினார். வினோத்தின் கருத்துக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இந்த நிலையில் இயக்குநர் வினோத் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்லிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அதில், நான் சொன்ன பிறகே இயக்குநர் வினோத் தனது பெயரை H.வினோத் என்பதற்கு பதிலாக எச்.வினோத் என தமிழில் உபயோகிக்க ஆரம்பித்தார் என்று சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.

First published:

Tags: Actor Ajith, Seeman, Thunivu