ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'மனச மயக்குது..! மல்லிப்பூ பாடலை விடாமல் கேட்கிறேன்'.. தாமரை, ரஹ்மானை சிலாகித்து பாராட்டிய சீமான்!

'மனச மயக்குது..! மல்லிப்பூ பாடலை விடாமல் கேட்கிறேன்'.. தாமரை, ரஹ்மானை சிலாகித்து பாராட்டிய சீமான்!

மல்லிப்பூ பாடலை பாராட்டி சீமான் மடல்

மல்லிப்பூ பாடலை பாராட்டி சீமான் மடல்

வெந்து தனிந்தது காடு படத்தின் மல்லிப்பூ பாடலை சிலாகித்து கவிஞர் தாமரை இசையமைப்பாளர் ரஹ்மானை பாராட்டி சீமான் மடல் ஒன்று எழுதி பதிவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கவுதம் மேனன் இயக்கத்தி்ல சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான வெந்து தனிந்து காடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், படத்தில் வரும் மல்லிப்பூ என்ற பாடல் தனித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாட்டுக்கென பிரத்தியேக ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடலை வெகுவாக புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

  பாடலை எழுதிய கவிஞர் தாமரை, இசையமைசப்பாளர் ரஹ்மான் ஆகிய இருவரையும் மல்லிப்பூ பாட்டிற்காக பாராட்டி மடல் ஒன்றை சீமான் எழுதி அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சீமான் தனது மடலில் கூறியதாவது, "என்னுடைய அன்புத்தம்பி

  சிலம்பரசன் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து 'வெந்து தணிந்தது காடு' படம் வெளி வந்திருக்கிறது.

  அதில் என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.

  கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடு இணையற்ற இசைத்தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!

  இதையும் படிங்க: கண்ணதாசனின் ‘மயக்கமா கலக்கமா’ பாடலை சிலாகித்து புகழ்ந்த வாலி… இவ்வளவு அர்த்தம் இந்த பாடலில் இருக்கிறதா?

  அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!". இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

  1998ஆம் ஆண்டில் சீமான் இயக்கத்தில் வெளியான இனியவளே படத்தில் மூலம் தான் திரைத்துறைக்கு கவிஞர் தாமரையை அறிமுகமானார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: AR Rahman, Seeman, Simbu