நடிகர் விஜய் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசியது தான் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றிருக்கிறது. கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசினார். பீஸ்ட் படத்துக்கு சில பல காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் 2 வருடங்களுக்கு பிறகு பேசியிருப்பதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விழாவில் பேசிய நடிகர் விஜய்யிடம் தொகுப்பாளர்கள், ''எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சின்ன சிரிப்புடன் கடந்து போகிறீர்களே எப்படி?'' எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய், ''பழகிப்போச்சு, தேவையான விமர்சனங்களும், தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மை ஓட வைத்துக்கொண்டு இருக்கிறது'' என்று பதிலளித்துவிட்டு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
அவர் சொன்ன குட்டிக் கதை - ''கடந்த 1990களில் ஒரு போட்டியாளர் உருவானார். அவர் மேல இருக்கிற பயத்துல நானும் ஓட ஆரம்பித்தேன். அவருடன் போட்டிபோட்டுக்கிட்டே இருந்தேன். அவர் அந்த கதையை கூற தொடங்கியதும் நடிகர் அஜித்தை பற்றி பேசுகிறார் என்றே அனைவரும் நினைத்தனர். காரணம் விஜய்யும் அஜித்தும் ஒரே காலகட்டத்தில்தான் நாயகனாக அறிமுகமாகி நடித்துக்கொண்டிருந்தனர்.ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த நடிகர் ஜோசப் விஜய் என்றார். மேலும் பேசிய அவர் போட்டியாளை வெல்லவேண்டும் என்ற வெறி இருக்கணும், அந்தப் போட்டியாளர் நீங்களாக இருக்கணும். இதை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க'' என்று குறிப்பிட்டனர்.
எனக்கு நான் தான் போட்டியாளர் என்பதை விஜய் அந்த இடத்தில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் சாமி வெற்றிவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதைத்தான் விஜய்யும் இப்பொழுது பேசியிருக்கிறார் என்று குறிப்பிட்டுவருகிறார்கள். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, ''எனக்கு நான் போட்டியாளராக இருக்கிறேன். மத்தவங்க படத்துக்கு இல்ல. இப்போ எனக்கு போட்டியாக இருப்பது படையப்பா அந்தப படத்தை விட பெரிய ஹிட் கொடுக்கணும்'' என்றார்.
இது ஒருபுறம் இருக்க, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யின் கருத்து குறித்து பதிலளித்துள்ளார். எனக்கு நான்தான் போட்டி என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசியது குறித்து செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான், ''இது எப்படி இருக்கு தெரியுமா ? விளையாட ஆள் இல்லையென்றால் பந்தை நாமளே சுவற்றில் எறிந்து விளையாடுவோம் இல்லையா, மேலும் கோவத்தில் இருக்கும் போது கண்ணாடி முன் நின்று திட்டிட்டுபோவோம் இல்லையா அதுமாதிரி தம்பி திரைப்பட வசனம்னு பேசிட்டார் போல, ரசிச்சு விட்டருவோம். அவருக்கு போட்டி அவரே என கருதுவது நல்லதுதான்'' என்றார். அவர் சொல்லி முடித்ததும் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
விஜய் தற்போது எது பேசினாலும் விமர்சனத்திற்குள்ளாகும் நிலையில், எனக்கு போட்டி நானே என்று பேசியிருப்பதும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. எப்படியோ வாரிசு படத்துக்கு ஃப்ரீ பப்ளிசிட்டி கிடச்ச மாதிரி ஆச்சு என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Seeman, Varisu