Home /News /entertainment /

தி கிரேட் இண்டியன் கிச்சன் தமிழ் ரீமேக்கின் செகண்ட் லுக் வெளியீடு!

தி கிரேட் இண்டியன் கிச்சன் தமிழ் ரீமேக்கின் செகண்ட் லுக் வெளியீடு!

தி கிரேட் இண்டியன் கிச்சன்

தி கிரேட் இண்டியன் கிச்சன்

மலையாளப் படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடும், நிமிஷா சஜயனும் நடித்த வேடத்தை தமிழில் ராகுல் ரவீந்திரனும், ஐஸ்வர்யா ராஜேஷும் ஏற்றிருக்கிறார்கள்.

மலையாளப் படம் தி கிரேட் இன்டியன் கிச்சன் தமிழில் ரீமேக் செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே. ஆர்.கண்ணன் இந்த ரீமேக்கை இயக்குவதும் பழைய செய்தி.

தற்போது அதன் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். மலையாளப் படத்தின் அதே பெயரை - தி கிரேட் இன்டியன் கிச்சன் - தமிழ் ரீமேக்குக்கும் வைத்துள்ளனர். அது மட்டுமில்லை. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றிருக்கும் படம், டைட்டில் எழுதப்பட்டிருக்கும்விதம் என எல்லாமே அப்படியே மலையாளத்தில் இருப்பது போலவே உள்ளது.

இந்திய குடும்பங்களில் இன்னும் 60 சதவீதத்திற்கு மேல் பெண்கள் அடுப்படியில்தான் உள்ளனர். கணவனுக்கும், அவனது குடும்பத்தினருக்கும் சமைத்து பணிவிடை செய்வதே இந்திய பெண்ணின் கடமையாக நமது கலாசார காவலர்கள் இப்போதும் கூறுகின்றனர். அப்படியொரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட பெண் ஒருகட்டத்தில் அந்த கலாசார தடைகளை உடைத்தெறிந்து விடுதலையாவதே தி கிரேட் இன்டியன் கிச்சன் படத்தின் கதை.

நேரடியான கூறுமுறையைக் கொண்ட இந்தப் படத்தில் சபரிமலை செல்லும் ஆண்களின் ஆச்சாரம் இறுதிப்பகுதியில் படத்துக்கு இன்னொரு நிறத்தை தருவதே தி கிரேட் இன்டியன் கிச்சன் படத்தின் முக்கியமாக கருதப்படுகிறது. தமிழில் இதனை மலையாளத்தில் இருப்பதைப் போன்று அப்படியே எடுப்பார்களா என்பது சந்தேகத்துக்குரிய கேள்வி. மலையாளப் படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடும், நிமிஷா சஜயனும் நடித்த வேடத்தை தமிழில் ராகுல் ரவீந்திரனும், ஐஸ்வர்யா ராஜேஷும் ஏற்றிருக்கிறார்கள்.

Second Look of The Great Indian Kitchen Tamil Remake, the great indian kitchen tamil, the great indian kitchen tamil dubbed movie download, the great indian kitchen tamil remake cast, the great indian kitchen tamil remake release date, the great indian kitchen tamil movie download isaimini, the great indian kitchen movie download, the great indian kitchen full movie, the great indian kitchen tamil watch online, the great indian kitchen tamil first look, தி கிரேட் இந்தியன் கிச்சன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ்

ஆர்டிசி மீடியா படத்தை தயாரிக்கிறது. ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் கபிலன் வைரமுத்து. ஏற்கனவே படப்பிடிப்பு முடியும் தருவாயை எட்டியுள்ளதால் பட வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Actress Aishwarya Rajesh, Tamil Cinema

அடுத்த செய்தி