ஜேம்ஸ்பாண்ட் நடிகர் உயிரிழந்தார் - ரசிகர்கள் சோகம்

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் ஷான் கெனரி காலமானார். அவருக்கு வயது 90.

ஜேம்ஸ்பாண்ட் நடிகர் உயிரிழந்தார் - ரசிகர்கள் சோகம்
நடிகர் ஷான் கெனரி
  • Share this:
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கொரோனா வைரஸ் உலகை மிரட்டி வருகிறது. இந்தியாவில் இதுவரை 81 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டு 74 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா மரணங்கள் ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இந்த பெருந்தொற்று காலத்தில் மக்களுக்குப் பிடித்த நடிகர்கள் சிலரும் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்த முதல் நடிகர் ஷான் கெனரி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 90.

மேலும் படிக்க: பெர்சனல் விஷயத்தை காமெடியாக்கிய விஜய் டிவி - கடுப்பான வனிதா விஜயகுமார்


ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஷான் கெனரி 7 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். மேலும் திரைப்படத்துறையில் உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கர், பாஃப்டா மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட முக்கிய விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும் படிக்க: மறைந்த பாடகர் எஸ்.பி.பி வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விருதுகள்

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஷான் கெனரி இன்று உயிரிழந்திருப்பது உலகம் முழுக்க இருக்கும் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்களும், திரைத்துறையினரும் சமூகவலைதளங்களில் மறைந்த நடிகர் ஷான் கெனரிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading