Seeman: லிங்குசாமி மீது சீமான் அளித்த புகார் தள்ளுபடி

லிங்குசாமி - சீமான்

அந்தக் கதை சீமான் பதிவு செய்து வைத்துள்ள பகலவன் படத்தின் கதை என சீமான் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஒரு புகார் அளித்தார்.

  • Share this:
    இயக்குநர் லிங்குசாமி மீது சீமான் கொடுத்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சீமான் அவர்கள் திரு.லிங்குசாமி மீது அளித்த கதை புகார் கடிதத்திற்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் சார்பாக தடை இல்லை என விளக்கமளித்துள்ளது.

    இயக்குனர் லிங்குசாமி தெலுங்கில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். நடிகர் ராம் அதில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் அந்தக் கதை சீமான் பதிவு செய்து வைத்துள்ள பகலவன் படத்தின் கதை என சீமான் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ஒரு புகார் அளித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் புகாரை அடுத்து லிங்குசாமியை விசாரித்த பாக்யராஜ் தலைமையிலான குழுவினர் 2013-ஆம் ஆண்டில் ஏற்கனவே சீமான் - லிங்குசாமி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் விடப்பட்டுள்ளதால் தற்போதைய புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சீமானின் புகாரை தள்ளுபடி செய்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: