நான் என் வாழ்வில் இந்த தவறை செய்ய மாட்டேன் - நடிகர் சதீஷ்

நடிகர் சதீஷ்

நான் என் வாழ்வில் இந்த தவறைச் செய்யமாட்டேன் என்று நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சிதம்பரம் தெற்குத் திட்டை ஊராட்சி மன்றத் தலைவி ராஜேஸ்வரி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மட்டும் தரையில் அமரவைக்கப்பட்டார். அதற்கான புகைப்படம் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையத் தொடர்ந்து தலைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் துணைத்தலைவர் மோகன் ராஜன் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜா உள்ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புவனகிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இச்சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது,

“பட்டியலினத்துத் தாயொருத்தி
தரையில் வீசப்படுவதா?

அவரென்ன மண்புழுவா?

தலைவியாய்க் கூட அல்ல...
மனுஷியாய் மதிக்க வேண்டாமா?

என் வெட்கத்தில்
துக்கம் குமிழியிடுகிறது.

தேசியக்கொடி அரைக்கம்பத்தில்
பறக்க வேண்டிய
துயரங்களுள் இதுவும் ஒன்று.” என்று குறிப்பிட்டிருக்கிறார் வைரமுத்து.மேலும் படிக்க: ‘இரண்டாம் குத்து’ படத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் அதிரடி

நகைச்சுவை நடிகர் சதீஷ் நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன் என்று தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, “ஜாதியைக் காட்டி ஒரு ஊராட்சித் தலைவரையே நாற்காலி தராமல் தரையில் அமர வைத்த அவலம்.... கண்டிக்கத் தக்க கொடூர செயல். என்னால் சமூகத்தை மாற்ற முடியுமோ இல்லையோ... நான் என் வாழ்வில் இத்தவறை செய்ய மாட்டேன். தனி மனித ஒழுக்கத்தால் மட்டுமே இதை ஒழிக்க முடியும். ” என்று கூறி #அனைவரும்சமம் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: