• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • காயமடைந்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர் - வைரல் வீடியோ!

காயமடைந்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர் - வைரல் வீடியோ!

காயமடைந்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர்

காயமடைந்த குட்டி யானையை மீட்டு தாயுடன் சேர்த்த வனத்துறையினர்

இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 13,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.

  • Share this:
ஒரு குட்டி யானை தன் தாய் யானையுடன் மீண்டும் இணைந்த ‘வீடியோ’ இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள வனப்பகுதியில் யானையின் சத்தம் கேட்கிறது என்று தகவல் வந்தது. இதனையடுத்து தமிழக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு குட்டி யானை ஒன்று பள்ளத்தில் சிக்கி கொண்டிருப்பதை கண்ட வனத்துறையினர், கால்நடை மருத்துவக்குழுவின் உதவியுடன் அதனை மீட்டு, சிகிச்சை அளித்தனர்.

பிறகு 7 மணி நேர தேடுதலுக்கு பிறகு அக்குட்டி யானையை அதன் தாய் யானையுடன் சேர்த்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து இந்திய வன அலுவலர் (IFS Officer) சுதா ராமன் ட்வீட் ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில், காட்டில் இருந்த குட்டி யானையை தமிழக வனக்குழு கன்டுபிடித்ததாகவும், அந்த குட்டி யானையை மீட்டு அதை பாதுகாப்பாக அதன் தாய் யானையிடம் கொண்டு சேர்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த பதிவில், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி என்ற ஹேஷ்டேக்குகளுடன் 45 விநாடிகள் அடங்கிய ஒரு வீடியோ ஒன்றையும் ஷேர் செய்திருந்தார்.

அதில் குட்டி யானை தனது தாயுடன் மீண்டும் இணைந்த நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது. அதில் தாயுடன் இணைந்த குட்டி யானை மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக இந்த குட்டி யானை காயமடைந்திருந்த போது தமிழ்நாடு வனக்குழுவினர் அதனை மீட்டு யானைக்கு தேவையான சிகிச்சை அளித்து, அக்குட்டி அதன் தாயுடன் சேர அழைத்து சென்ற வீடியோவும் ஷேர் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் குட்டி யானை மீட்புக் குழுவுடன் செல்கிறது. தமிழ்நாடு வனத்துறையினரின் இசட்பிளஸ் பாதுகாப்புடன் தனது தாயுடன் மீண்டும் இணைவதற்கு இந்த குட்டி யானை மகிழ்ச்சியுடன் நடந்து செல்கிறது.

Also read... ராட்சத பாம்புடன் விளையாடும் 2 வயது சிறுவன் - வைரலாகும் வீடியோ!

வீடியோவை இங்கே பாருங்கள்:



இணையத்தில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 13,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. இந்த வவீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தமிழக வனத்துறை அதிகாரிகளைப் பாராட்டி வருகின்றனர். வனத்துறை அதிகாரிகளை சுற்றி யானை எப்படி வசதியாக இருந்தது என்பதையும் சிலர் சுட்டிக்காட்டினர்.

"வனத்துறை அதிகாரிகள் மீதான குட்டி யானையின் நம்பிக்கையானது, இந்த பிரபஞ்சத்தில் நேர்மறை மேன்மையை நம்புவதற்கு நம்மைத் தூண்டுகிறது" என்று வீடியோவின் கீழ் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வனத்துறையினர் சிறப்பான செயலை மேற்கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். ட்விட்டர் மட்டும் இல்லாமல், இன்ஸ்டாகிராம்,பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: